ETV Bharat / state

'NDPA'-வா? 'NDA'-வா.? பேனரில் கூட்டணி பெயர் மாற்றம்; அண்ணாமலை விளக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பிரமுகர்கள் வைத்த பேனரில் கூட்டணி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை
author img

By

Published : Feb 2, 2023, 7:17 AM IST

அண்ணாமலை விளக்கம்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று (பிப்.1) இரவு டெல்லி புறப்படும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “இலங்கையில் 13வது சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் எனத் தமிழக பாஜகவின் நீண்ட கால கோரிக்கை ஆகும். தற்போது இலங்கை சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது. வடகிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13வது அட்டவணையில் உள்ள போலீஸ், வருவாய் ஆகிய 2 அதிகாரங்களைத் தர வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளனர்.

இலங்கை சென்ற போது ரணில்விக்கரம சிங்கேவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்து விட்டு வந்தார். வெளியுறவு அமைச்சரை சந்தித்து இலங்கையில் வருவாய், காவல்துறை அதிகாரத்துடன் கூடிய 13வது அட்டவணையை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக பாஜக சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்” என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிக்காமல் இருப்பதாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் இல்லை. அசுர பலம், பண பலம், படை பலம், ஆள் பலம் எல்லாவற்றுக்கும் மேலாக அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடிய திமுகவை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் ஒரு வலிமையான வேட்பாளர் நிற்க வேண்டும். வேட்பாளர் அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள்” என பதிலளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரில் கூட்டணி பெயர் தவறாக அச்சிடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கூட்டணி பெயர் ஏன் மாற்றினார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். காலையிலிருந்த கூட்டணி பெயர் 6 மணி நேரத்தில் எப்படி மாறியது தெரியவில்லை. 'NDA' தான் கூட்டணி, 'NDPA' இல்லை.

அதிமுக மூத்த நிர்வாகிகள் என்னிடம் பேசும் போது பிரிண்டிங் பிழை என்றார்கள். மோடி படம் இல்லை என்பதைப் பேனர் வைத்தவர்களிடம் தான் கேட்க வேண்டும். நிறையப் பேர் களத்தில் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ பதில் விரைவில் சொல்லப்படும். பேனரில் 6 மணி நேரத்தில் பெயர் மாறியதை போல், காலை வரை காத்திருங்கள்” என கூறி சென்றார்.

இதையும் படிங்க: 'ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும்' - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.