கோபி அருகேயுள்ள கவுந்தபாடியில் ஹெர்போ கேர் மருத்துவமனை உரிமையாளர் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வந்தார். சமீபத்தில் மனு நூலை மேற்கொள்காட்டி திருமாவளவன் பேசிய பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருமாவளவனனின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கவுந்தம்பாடியில் கோஷங்கள் எழுப்பினர்.
இதில், ஆத்திரமடைந்த விசிகவினர், பாஜகவினரை நோக்கிவர இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவலர்கள் மோதல் ஏற்படாமல் தடுக்க முயன்றனர். இருப்பினரும் இருதரப்பினரும் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த 25 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் தலைவர் பாதுகாப்பிற்கு வந்த வாகனம் விபத்து