ETV Bharat / state

'ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்' -  அண்ணாமலை - bjp anamalai

ஈரோடு: ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கோபிசெட்டிபாளையத்தில் தெரிவித்துள்ளார்.

bjp annamalai  பாஜக அண்ணாமலை அரசியல்  bjp anamalai  rajini political life
'ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்' பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை
author img

By

Published : Sep 18, 2020, 9:46 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பாஜகவின் ஈரோடு வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "மத்திய அரசு சார்பில் புதிதாக கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

bjp annamalai  பாஜக அண்ணாமலை அரசியல்  bjp anamalai  rajini political life
நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை

இதை தமிழ்நாடு விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது வேளாண்மை கொள்முதல்களின்படி எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மாநில அரசின் கவனக்குறைவால்தான் கிசான் திட்டத்தில் முறைகேடு ஊழல் நடைபெற்றது. மத்திய அரசு விவசாயிகளின் நலன்கருதி நலத்திட்டம் கொண்டுவந்துள்ளது.

'ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்' பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

அதனை முறையாகச் செயல்படுத்தாது மாநில அரசுதான். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து சொல்லும் அளவு எனக்கு அதிகாரம் இல்லை.

பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தாது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் முன்பு எதிர்ப்பு வந்தநிலையில், நீட் தேர்வு எழுதிய பின்பு மாணவர் எவரும் நீட் தேர்வு குறித்து குறை கூறவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: 70 அடி பாஜக கொடிக்கம்பம் இரவோடு இரவாக இடித்து அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.