ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டுவருகிறது. பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் இயங்கும் இந்தப் பயிற்சி மையத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளில் பணிபுரிந்துவரும் இளநிலை உதவியாளர்களுக்கு 35 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தற்போது பயிற்சிபெற்றுவரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாதேவி என்பவரை டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்திலிருந்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுததேவி எப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேர்வானார், விழுப்புரம் மாவட்டத்தில் எந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் என்பன குறித்த தகவல்களை அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் தெரிவிக்க மறுத்துவிட்டனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு