ETV Bharat / state

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! - Bhavanisagar dam

ஈரோடு: பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

bhavanisagar-dam
author img

By

Published : May 22, 2019, 12:16 PM IST

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் அணைக்கு நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது.

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாள்களாக 150 கன அடி முதல் 250 கனஅடி வரை இருந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் நீர் மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று 342 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 886 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள் மின் உற்பத்திக்காக நீர் திறப்பு அதிகரிக்கும்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' எனத் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.03 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 5.2 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைநீர்மட்டம் 53 அடி:

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 886 கனஅடியாக அதிகரிப்பு

TN_ERD_01_22_SATHY_BHAVANISAGAR_DAM_VIS_TN10009

(Visual  FTP இல் உள்ளது)

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939

22.05.2019

பவானிசாகர் அணைநீர்மட்டம் 53 அடி:

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 886 கனஅடியாக அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம், பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் அணைக்கு நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 53 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து 150 கன அடி முதல் 250 கனஅடி வரை இருந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் நீர் மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று 342 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 886 கனஅடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள் மின் உற்பத்திக்காக நீர் திறப்பு அதிகரிக்கும் போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.03 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 5.2 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.