ETV Bharat / state

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் கசிவு- நீரின் கனஅடி குறைப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கீழ்பவானி பிரதான வாய்க்கால் மண்கரையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக வாய்க்காலில் திறந்தவிடப்பட்ட 2,300 கனஅடி நீரிலிருந்து 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

author img

By

Published : Aug 20, 2019, 11:11 AM IST

சத்தியமங்கலம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் கசிவி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்காக கடந்த 16ஆம் தேதி முதல்கட்டமாக 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கால்வாயில் நேற்று 2,300 கனஅடியாக திறந்துவிடப்பட்டது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி சென்றது.

124 மைல் நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்காலில், சத்தியமங்கலம் உக்கரம் 11ஆவது மைல் என்ற வாய்க்காலின் மண்கரையில் ஏற்பட்ட சிறு துவாரத்திலிருந்து தண்ணீர் வெளியேறி கரைக்கு மறுபுறம் உள்ள பொன்னுச்சாமி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது.

பின்னர், அவ்வழியாக சென்ற விவசாயிகள், மண்கரையில் தண்ணீர் கசிவதைப் பார்த்து பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பொதுப்பணித் துறையினர் வாய்கால் நீர் கரைபுரண்டோடுவதைப் பார்த்து தண்ணீர் திறப்பை 1000 கனஅடி குறைக்குமாறு பவானிசாகர் அணை நிர்வாகத்திடம் அறிவுறுத்தியது. இதனையடுத்து, தண்ணீர் திறந்துவிடும் அளவை 2,300 கனஅடியில் இருந்து 1000 கஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் கசிவு

வாய்க்காலில் தண்ணீர் அளவு பாதியாக குறைந்ததால் தண்ணீர் கசிவு நின்றது. வாய்க்கால் கரை மண் அரிப்பைத் தடுப்பதற்கு தற்காலிகமாக செம்மண் கொட்டியும், கரையில் உள்ள துவாரங்களை அடைத்தும் வாய்க்கால் கரையை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வாய்க்கால் கரை பலப்படுத்திய பின்னரே, நீரின் அளவு 1000 கனஅடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Intro:Body:tn_erd_01_sathy_bhavanisagar_dam_leakage_vis_tn10009

சத்தியமங்கலம்: கீழ்பவானி பிரதான வாய்க்கால் மண்கரையில் கசிவு: கரையை பலத்துப்படுத்தும் வரை ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறப்பு இல்லை

சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கீழ்பவானி பிரதான வாய்க்கால் மண்கரையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக வாய்க்காலில் திறந்தவிடப்பட்ட 2300 கனஅடிநீரில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது.மண்கரை பலத்தப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் அடுத்த் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு கடந்த 16ம் தேதி முதற்கட்டமாக 500 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கால்வாயில் நேற்று 2300 கனஅடியாக திறந்துவிடப்பட்டது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் இரு கரையை தொட்டிபடி சென்றது. 124 மைல் நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்காலில், சத்தியமங்கலம் உக்கரம் 11வது மைல் என்ற வாய்க்கால் மண்கரையில் ஏற்பட்ட சிறு துவாரத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி கரைக்கு மறுபுறம் உள்ள பொன்னுச்சாமி என்பவரிடம் தோட்டத்தில் வாய்கால் நீர் சூழந்தது. அவ்வழியாக சென்ற விவசாயிகள், மண்கரையில் தண்ணீர் கசிவதை பார்த்து பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பொதுப்பணித்துறையினர் வாய்கால் நீர் கரைபுரண்டுஓடுவதை பார்த்து தண்ணீர் திறப்பை 1000 கனஅடிநீராக குறைக்கமாறு பவானிசாகர் அணை நிர்வாகத்திடம் அறிவுறுத்தியதை அடுத்து தண்ணீர் திறந்துவிடும் அளவை 2300 கனஅடியில் இருந்து 1000 அடியாக குறைக்கப்பட்டது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் அளவு பாதியாக குறைந்ததால் தண்ணீர் கசிவதும் நின்றுபோனது. வாய்கால் கரை மண்அரிப்பை தடுப்பதற்கு தற்காலிகமாக செம்மண் கொட்டி பலத்தப்பட்டது. மேலும் கரையில் உள்ள துவாரங்களை அடைத்து வாய்கரையை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கரை பலப்படுத்தும் பணியில் நடைபெறுவதால் விவசாயிகள் அவ்வழியாக செல்லும் பாதையில் முற்செடிகள் போட்டு தடை ஏற்படுத்தியுள்ளனர். வாய்க்கால் கரை பலப்படுத்தும் வரை, அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாக நீடிக்கும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.