ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத கிராமம்! - உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்த கிராமம்

ஈரோடு: பவானி அருகே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்ததுடன் யாரும் வேட்புமனுவும் தாக்கல் செய்யவில்லை.

bhavani village boycott local body election
bhavani village
author img

By

Published : Dec 18, 2019, 5:33 AM IST

உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்த நிலையில், நேற்று மாலையுடன் அது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி, சேர்வராயன் பாளையம், ஆண்டிகுளம் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றும் சாய கழிவுநீரினால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் நிலத்தடி நீர் மட்டம் மாசு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தற்போது தமிழ்நாடு அரசு ஆண்டிகுளம் மற்றும் ஈரோடு பகுதியில் இரண்டு இடங்களில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்கான ஆய்வு பணிகளை டெல்லியில் இருந்து வந்த அலுவலர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

இந்த பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கபட்டால் தங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று கூறி ஆண்டிகுளம் பகுதியில் வசிக்கும் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்துள்ளனர்.

ஆனால் பொதுமக்களின் கோரிக்கையின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாகக் கூறிய ஆண்டிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 3ஆவது வார்டு பொதுமக்கள், உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத கிராமம்!

அதேபோன்று ஆண்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு தங்களது வாக்கினைப் பதிவு செய்யப்போவது இல்லை என்றும் கூறியுள்ளனர்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பு செய்ததுடன் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே காரணத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேனர் கட்டப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படியுங்க: வார்டு வரையறையில் குளறுபடி - வாக்குரிமை பறிக்கப்பட்ட கிராம மக்கள்!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச17

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்யாத கிராமமக்கள்!

பவானி அருகே பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்ததுடன் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-தேதியில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களாக நடைபெற்று நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி, சேர்வராயன் பாளையம், ஆண்டிகுளம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றும் சாய கழிவுநீரினால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் நிலத்தடி நீர் மட்டம் மாசு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு ஆண்டிகுளம் மற்றும் ஈரோடு பகுதியில் இரண்டு இடங்களில் சுமார் 1100-கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்கான ஆய்வு பணிகளை டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

இந்த பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கபட்டால் தங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறி ஆண்டிகுளம் பகுதியியில் வசிக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்துள்ளனர்.

ஆனால் பொதுமக்களின் கோரிக்கையின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக கூறிய ஆண்டிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 3-வது வார்டு பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அதேபோன்று ஆண்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு தங்களது வாக்கினை பதிவு செய்ய போவது இல்லை என்றும் கூறியுள்ளனர்.

Body:தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பு செய்ததுடன் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:இதே காரணத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேனர் கட்டப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.