ETV Bharat / state

பவானிசாகர் அணைக்கு வயது 69! ஆண்டுகள் கடந்து விவசாயத்தை காக்கும் இறைவி! - பவானிசாகர் அணை

Bhavanisagar Dam : கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், தென்னந்தியாவிலேயே இரண்டாவது மிப்பெரிய மண் அணையான பவானிசாகர் அணை, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு 68 ஆண்டுகள் நிறைவடைந்து, 69வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Bhavani Sagar
பவானிசாகர் அணை
author img

By

Published : Aug 20, 2023, 1:41 PM IST

பவானிசாகர் அணைக்கு வயது 69!

ஈரோடு: நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறு மற்றும் மாயாறு கூடுமிடத்தில் அணை கட்டி, மழைக் காலத்தில் வரும் தண்ணீரை சேமித்து வைத்து வறட்சி காலத்தில் பாசனத்துக்கு பயன்படுத்தும் நோக்கில், பவானிசாகர் அணைத் திட்டம் கடந்த 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பவானிசாகர் அணையை நேரு, ராஜாஜி பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படம்

அப்போதையை காலகட்டத்தில் உணவு பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வந்ததால், மக்களை உயிர்ப்பிக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால், இத்திட்டத்திற்கு பவானித்திட்டம் என்று பெயரிடப்பட்டது. பவானி என்ற சொல்லுக்கு 'உயிர் கொடுப்பவர்' என்று பொருள் உள்ளதாக தெரிகிறது.

பவானிசாகர் அணை கட்டுமானப் பணி
பவானிசாகர் அணை கட்டுமானப் பணி

இத்திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு, இப்பகுதியில் உணவு பஞ்சத்தை போக்குவதற்கு அணையின் வலது பகுதியில் 124 மைல் தூரத்திற்கு நீண்ட கால்வாய் வெட்டி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட பணிகள் நடைபெற்றன. கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி 10 கோடி ரூபாய் செலவில் அணைக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த உறுதிதன்மையுடன் கூடிய ஷட்டர்கள் கட்டப்பட்டன. பவானிசாகர் அணை கட்டுமானப் பணி கடந்த 1955ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

பவானிசாகர் அணை கட்டுமானப் பணி
பவானிசாகர் அணை கட்டுமானப் பணி

பவானிசாகர் அணையால், தமிழ்நாட்டில் வறட்சி நிலவிய காலத்தில் கூட தண்ணீர் பிரச்சினை இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் மாறியது. ஆண்டுதோறும் நன்செய் மற்றும் புன்செய் பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு காரணமாக 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கும் முக்கிய பங்காற்றும் இந்த பவானிசாகர் அணை கடந்த 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

105 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் இன்று வரை 28 முறை 100 அடியும், 21 முறை 102 அடியும் நிரம்பியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையின் கட்டுமானப் பணியை அப்போதைய பிரதமர் நேரு, சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி போன்ற தலைவர் பார்வையிட்டுள்ளனர்.

கீழ்பவானி அணை கட்டுமானப் பணியின்போது
கீழ்பவானி அணை கட்டுமானப் பணியின்போது

ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை கட்டி நேற்றோடு 68 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. அதன்படி, பவானிசாகர் அணைக்கு 69வது வயது தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு பிறகு 103 அடியை எட்டிய பவானிசாகர் அணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.