ETV Bharat / state

பவானி சாகர் அணை பூங்கா மூடல்: ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்! - ஈரோடு மாவட்ட செய்திகள்

விடுமுறை கொண்டாட்டத்திற்காக பவானிசாகர் அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் பூங்கா மூடப்பட்ட ஏமாற்றத்தை தவிர்க்க பவானி மற்றும் கீழ்பவானி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

author img

By

Published : Jan 17, 2021, 9:02 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க ஜனவரி 15 முதல் 17ஆம் தேதி வரை பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடர் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக பவானிசாகர் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அணை பூங்கா மூடப்பட்டதை கண்டு ஏமாற்றமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அணை முன்பு உள்ள பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் குடும்பத்துடன் நீரில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆற்றங்கரை ஓரத்திலும், வாய்க்கால் கரையிலும் மேடான பகுதிகளில் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்வதோடு செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாடம்: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.