ETV Bharat / state

வருங்காலத்தில் காட்சிப்பொருளாகும் ஆபத்தில் பவானி ஜமுக்காளம் - பாரம்பரிய தொழிலை பாதுகாக்குமா அரசு..? - Erode Bhavani Jamukalam

ஈரோடு: கலைநயத்துடன் உற்பத்தி பவானி ஜமுக்காளத்தில் எழுத்து, முகம் வரையத் தெரிந்தவர்கள் ஏழு பேர் மட்டுமே இருக்கிறார்கள். எங்கள் தலைமுறையினருக்கு பிறகு, பவானி ஜமுக்காளம் வெறும் காட்சிப் பொருளாக இருக்கும் என நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

bhavani-jamakkalam-will-be-display-object-in-future

author img

By

Published : Nov 16, 2020, 3:08 PM IST

காவிரி, பவானி, அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் தான் பவானி. தென் திரிவேணி என அழைக்கப்படும் பவானி கூடுதுறையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு, தை அமாவாசை ஆகிய தினங்களில் மக்கள் கூடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

இதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டம் பவானிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் பவானிக்கு ஜமக்காளம். எவ்வித இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் உடல் உழைப்பால் மட்டுமே தறிக்குழியில் அமர்ந்து நெய்யப்படும் பவானி ஜமுக்காளம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.

பெரும் பாரம்பரியமுள்ள இந்த பவானி ஜமுக்காளத்திற்கு மத்திய அரசு சார்பாக 2006ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக ஜமக்கர் என்ற சமூகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த பவானி ஜமுக்காளம்.

20 அடி நீளம், 20 அடி அகலம் வரையில் நெசவு செய்யப்படும் பவானி ஜமுக்காளத்திற்கு, தமிழர்களின் விழாக்களில் எப்போதும் தனி இடம் உண்டு. திருமண விழாக்களில் அமர்ந்து உண்பதற்கு, ஆலமரத்தடி பஞ்சாயத்து நிகழ்விற்கு, வளைகாப்பு, காதுகுத்து என பல விழாக்களிலும் பவானி ஜமுக்காளம் இடம்பெற்றிருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் திருமணத்தின்போது பெண்ணிற்கு சீர்வரிசையாக பவானி ஜமுக்காளம் வழங்கும் வழக்கமும் நம்மிடமும் உள்ளது. இதனால் பவானி ஜமுக்காளத்தை தமிழர்களின் கலாச்சார பொருள் என்றே கூறலாம்.

இது இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டதோடு, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்த தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர்.

ஆனால் பவானி ஜமுக்காளம் தயாரிக்கும் தொழில், தற்போது அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குழித்தறியில் நெய்யப்படும் ஜமுக்காளங்கள், விசைத்தறிகளிடம் போட்டி போட முடியாமல் திணறி வருகிறது. சோலாப்பூர், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போர்வைகளால் பவானி ஜமுக்காளத்தின் மீதான மோகம் மக்களிடையே நாளாக நாளாகக் குறையத் தொடங்கிவிட்டது.

லட்சக்கணக்கானோர் இந்த ஜமுக்காளம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது 200க்கும் குறைவானவர்களே உள்ளனர். அவர்களும் வேறு தொழில் தெரியாததால், இதே தொழிலில் ஈடுபட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கும்கூட உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கப்பதில்லை.

ஒரு நாள் கூலியாக 300 ரூபாய் கிடைப்பதே பெரும் சிரமம். அதிலும் வாரத்திற்கு மூன்று, நான்கு நாள்கள் மட்டும் தான் வேலை இருக்கும். எந்த அரசு ஆட்சியமைத்தாலும் இந்த நிலை மாறுவதில்லை என வேதனை தெரிவிக்கிறார் குழித்தறி நெசவாளர் மணி.

போதிய நூல் கிடைக்காதது, கரோனாவால் வெளிமாநில ஏற்றுமதிக்கு தடை, விசைத்தறி பிரச்னை, அரசு வழங்கும் மானியம் கிடைக்காதது, ஊதியப் பிரச்னை என இந்த ஜமுக்காளம் தயாரிக்கும் கைத்தறி தொழில் அழிந்து வருவதற்கு ஏராளமான காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

முன்காலத்தில் பவானி வட்டாரம் முழுக்க கைத்தறி தொழிலில் மக்கள் ஈடுபட்டு வந்ததாகக் கூறும், கைத்தறி ஜமுக்காள உற்பத்தியாளர் தங்கவேல், ஆனால் இப்போது மிகவும் குறைந்த அளவிலேயே ஈடுபடுவதாகவும், இளம் தலைமுறையினர் இந்தத் தொழிலில் ஆர்வமின்றி இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார். இதனால் பவானி ஜமுக்காளத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தும் பயன்படாமல் உள்ளது என அவர் நம்பிக்கையிழந்து பேசுகிறார்.

மேலும் கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ரகங்களுக்கு ஏற்ப அரசு வழங்கும் மானியம் பல ஆண்டுகளாக பவானி குழித்தறி நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அரசு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பயன்கள், சலுகைகள் என எதுவும் நெசவாளர்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோன்று ஜமுக்காளத்துக்கும் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை விதித்துள்ளதால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் காட்சிப்பொருளாகும் ஆபத்தில் பவானி ஜமுக்காளம்

கலைநயத்துடன் உற்பத்தி செய்யப்படும் பவானி ஜமுக்காளத்தில் எழுத்து, முகம் வரையத் தெரிந்தவர்கள் ஏழு பேர் மட்டுமே இப்போது இருக்கிறார்கள். தங்கள் தலைமுறைக்குப் பிறகு, பவானி ஜமுக்காளம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே மாறிவிடும் என்று நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பவானி குழித்தறி ஜமுக்காளத்தை உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் வாழ்க்கை, குழியில் வீழ்ந்துவிடாமல் இருக்க, அடுத்த தலைமுறை இளைஞர்கள் இந்தக் குழித்தறி நெசவுத்தொழிலில் பங்குகொள்ள வேண்டும். அதற்கு அரசு சார்பாக தொழில்நுட்ப கல்லூரி அமைத்து பவானி குழித்தறி நெசவுத்தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பதே பவானி நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.