ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கரடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இலந்தை பழம் காய் பிடிக்கும் பருவம் என்பதால் கரடிகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து புதுகுய்யனூர் கிராமத்துக்கு செல்கின்றன.
ஊரடங்கால், முன்பு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்த நெடுஞ்சாலையில், தற்போது வாகனப் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் ஹாயாக சுற்றித்திரிகின்றன.
இந்நிலையில், பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த ஆண் கரடியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், கரடியை மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்று உடற்கூறாய்வு செய்து மண்ணில் புதைத்தனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு நோ என்ட்ரி - களப்பணியாளர்களை கெளரவித்த சமூக ஆர்வலர்