சமீபத்தில் பெய்த தென்மேற்குப் பருவமழையால் பவானி ஆறு, மாயற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி உயரமுள்ள பாவனி அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 27ஆம் தேதி நிறுத்தப்பட்டது. எனவே அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து மீண்டும் நேற்றிரவு முழு நீர்மட்ட அளவான 105 அடியை தொட்டது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடி, நீர் இருப்பு 32.8 டிஎம்சி நீர்வரத்து உள்ளது. இதையடுத்து அணையிலிருந்து பவானி ஆற்றில் கீழ்மதகுகள் வழியாக விநாடிக்கு 3100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித் துறை வருவாய், உள்ளாட்சி அமைப்புகள் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளன.