ETV Bharat / state

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.79 லட்சம் - bannari amman temple hundy counting work

ஈரோடு: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பிப்ரவரி மாத காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

bannari amman temple
bannari amman temple hundy counting
author img

By

Published : Feb 25, 2020, 11:53 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோயில் பிரசித்த பெற்ற கோயில் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்மனை வழிபடுகின்றனர். இந்த மாதம் (பிப்ரவரி) கோயிலில் ஆங்காங்கே வைக்கப்பட்ட உண்டியலில், காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணுவதால், இந்த மாத உண்டியல் எண்ணும் பணி நேற்று தொடங்கியது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் சபர்மதி, திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் வெங்கடேஷ், கோயில் அறங்காவலர்கள் முன்னிலையில் 20 உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் ராஜன்நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள், சத்தியமங்கலம் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

மொத்த உண்டியல் வசூல் ரூ.79 லட்சத்து 9 ஆயிரத்து 966 ரூபாயும், 550 கிராம் தங்கம், 1320 கிராம் வெள்ளி இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 21 அரிவாள் மீது 68 முறை‌‌ நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.