ETV Bharat / state

இயற்கையை நேசிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பயணம்! - விழிப்புணர்வு மிதிவண்டிப் பயணம்

ஈரோடு: இயற்கை வேளாண்மை குறித்தும், இயற்கையை நேசிக்க வலியுறுத்தியும் தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் 300 கிமீ தூரம் விழிப்புணர்வு மிதிவண்டிப் பயணத்தில் ஈடுபட்டனர்.

Awareness Bicycle Ride
Awareness Bicycle Ride
author img

By

Published : Jan 22, 2020, 2:38 PM IST

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் நடுநிலைப் பள்ளியில் 85 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். இப்பள்ளியில் இயற்கை வேளாண்மை குறித்து மட்டுமே பயிற்சி அளித்துவருவதுடன் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிது நிலம் ஒதுக்கப்பட்டு அதில் அவர்களே விவசாயமும் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இயற்கை வேளாண்மை குறித்தும், விவசாயிகளின் பயன்கள் குறித்தும் மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு மிதிவண்டிப் பயணம் ஒன்றை பள்ளி சார்பாக ஏற்பாடு செய்துள்ளனர். இப்பயணம் தருமபுரியில் தொடங்கி மேட்டூர், அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் வரை செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வுப் பயணத்தில் 15 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயணத்தை தொடங்கியுள்ளனர். இப்பயணம் 18ஆம் தேதி தொடங்கி இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுக்கரைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அருணாசலம் என்ற இயற்கை வேளாண்மை முன்னோடி விவசாயி தோட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். அங்கு மாணவ மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இயற்கை விவசாயி அருணாசலம் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும், இயற்கை வேளாண்மைக்கு தேவையான மூலப்பொருள்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

அவரது பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகள், அதிலிருந்து கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு மீன்வளர்ப்பு, மீனிலிருந்து வரும் கழிவுகள், பயிர்களுக்கு என ஒவ்வொரு செயல்களையும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இயற்கையை நேசிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பயணம்

இப்பயணம் குறித்து மாணவர்கள் கூறுகையில், தங்களது மிதிவண்டிப்பயண நோக்கமே இயற்கை குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மேற்கொண்டுள்ளதாகவும், இயற்கையை மனித அழிவிலிருந்து மீட்டெடுக்க இப்பயணத்தை மிதிவண்டியில் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

காற்றை மாசுபடுத்தாத இப்பயணத்தில் மேட்டுப்பாளையம் வரை சென்று விவசாயிகளை சந்தித்து பல்வேறு தகவல்களைச் சேகரிக்கவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி பரிமாற்றத் திட்டம் - மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Intro:Body:tn_erd_01_sathy_cycle_rally_vis_tn10009

இயற்கை வேளாண்மை, இயற்கை நேசிக்க வலியுறுத்தி பள்ளி மாணவியர்கள் 300 கிமீ தூரம் மதிவண்டி விழிப்புணர்வு பயணம்

இயற்கை வேளாண்மை குறித்தும் இயற்கையை நேசிக்க வலியுறுத்தியும் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் புவிதம் பள்ளி மாணவ மாணவிகள் 300 கிமீ தூரம் மிதிவண்டிப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். மிதிவண்டிப்பயணம் தற்போது கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இயற்கை வேளாண்மை விவசாயி தோடத்திற்கு வந்து பார்வையிட்டு இயற்கை வேளாண்மை குறித்து பல்வேறு தகவல்களை அறிந்தனர்

தர்மாபுரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியான புவிதம் பள்ளியில் 85 மாணவ மாணவிகள் பயின்று வருகிற்னர். 8ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் இயற்கை வேளாண்மை குறித்து மட்மே பயிற்சி அளித்துவருவதுடன் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிது நிலம் ஒதுக்கி அதில் அவர்களே விவசாயம் செய்துவருகின்றனர். இந்நிலையில் இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளின் பயன்கள் குறித்தும் மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டிப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். இப்பயணம் தர்மபுரியில் தொடங்கி மேட்டூர் அந்தியூர் கோபிசெட்டிபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் வரை செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. இதில் 15 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று மிதிவண்டிப்பயணத்தை தொடங்கியுள்ளனர். இப்பயணம் 18ந்தேதி தொடங்கி இன்று ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுக்கரைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அருணாசலம் என்ற இயற்கை வேளாண்மை முன்னோடி விவசாயி தோடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். அங்கு மாணவ மாணவிகளுக்கு ஆராட்சி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இயற்கை விவசாயி அருணாசலம் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும் இயற்கை வேளாண்மைக்கு தேவையான மூலப்பொருட்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அவரது பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகள் பராமரிப்பு குதிரை பாராமரிப்பு ஆடுககள் வளர்ப்பு அதிலிருந்து கிடைக்கும் கழிவுகளை கொண்டு மீன் வளர்ப்பு மீனிலிருந்து வரும் கழிவுகள் பயிர்களுக்கு என ஒவ்வொரு செயல்களையும் மாணவ மாணவிகளுக்கு புரியும் படி எடுத்துரைத்தார். மேலும் இயற்கையுடன் ஒன்றி வாழ மரங்கள் வளர்பது குறித்தும் தனது பண்ணையில் இரண்டு ஏக்கரில் சுமார் 1500 இரக மரங்கள் ஒரே இடத்தில் வளர்க்கப்படுவதையும் மாணவ மாணவிகளுக்கு காட்டி ஒவ்வொரு மரத்தின் பயன்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் நாட்டு மாடுகள் ஆடுகள் குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் விளையாடியும் தொட்டுப்பார்த்தும் மகிழ்ததுடன் இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளின் பங்களிப்பு குறித்தும் கேட்டறிந்து வியந்தனர். மேலும் தங்களது மிதிவண்டிப்பயண நோக்கமே இயற்கை குறித்தும் இயற்கை வேளாண்மை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இயற்கையை மனித அழிவிலிருந்து மீட்டெடுக்க இப்பயணத்தை மிதிவண்டியில் ஆரம்பித்துள்ளதாகம் மிதிவண்டிப்பயணம் என்பதால் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள அனைத்து விசயங்களையும் அறிந்து கொள்ளமுடிந்துள்ளதாகவும் காற்றை மாசு பாடுத்தாக இப்பயணம் மேட்டுப்பாளையம் வரை சென்று விவசாயிகளை சந்தித்து பல்வேறு தகவல்களை சேகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேட்டி:
1.திரு.மாதவராஜ் புவிதம் பள்ளி பணியாளர்
2.சம்யுக்தா புவிதம் பள்ளி மாணவி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.