ETV Bharat / state

பெருந்துறை அருகே நகை கடை சுவரில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சி! - நகை கடை

ஈரோடு பெருந்துறையில் நகைக்கடையின் பின்புற சுவரை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால், கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

நகை கடை சுவரில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சி

author img

By

Published : Dec 27, 2022, 2:18 PM IST

நகை கடை சுவரில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சி

ஈரோடு: பெருந்துறை நான்கு சாலை சந்திப்பில் பரமசிவம் என்பவருக்குச் சொந்தமான ERK நகை கடை உள்ளது. கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம் போல் நேற்று இரவு கடையைப் பூட்டி சென்றுள்ளனர், காவலாளி ராஜா என்பவர் மட்டும் கடையின் முன்புறம் காவல் பணியிலிருந்துள்ளார்.

இந்த சூழலில் கடையினுள் பொறுத்தப்பட்டிருத்த எச்சரிக்கை அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் பதறிப்போன காவலாளி உடனடியாக இது குறித்து உரிமையாளருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடையினை ஆய்வு செய்தனர்.

அப்போது, கடையின் பின்புறம் நகை கடை சுவரில் துளையிட்டு, மர்ம நபர்கள் உள்ளே வந்து பாதுகாப்பு பெட்டகத்தைத் திறக்க முயன்றதும், அப்போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதனால் கடையிலிருந்த பல கோடி மதிப்புடைய தங்க ஆபரணங்களும், வெள்ளி பொருட்களும் கொள்ளை போகாமல் தப்பியது.

கடையிலிருந்த சிசிடிவி கேமராவை வேறு பக்கம் திருப்பி வைத்து விட்டு முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து, இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நகராட்சிக்குட்பட்ட கடைகளில் கொள்ளை முயற்சி.. இளைஞர் கைது..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.