ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட செல்லம்பாளையம் மேற்கு பீட்டு வேதபாழிசராகம் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் குடிக்கவந்த நான்கு மாதமே ஆன குட்டியானை ஒன்று அதில் சிக்கிக்கொண்டது. தாய் யானை எவ்வளவோ முயற்சித்தும் குட்டியை மீட்க முடியாமல் தவித்துவந்தது.
இந்நிலையில், அந்தியூர் ரேஞ்சர் பாலகிருஷ்ணன் தலைமையில் வனத் துறையினர் ரோந்துப் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, யானையின் பிளிறல் சத்தம்கேட்டு அங்கு சென்றுபார்த்தனர்.
பின்னர், காக்காயனுார் ஊர்மக்கள் துணையுடன் தாய் யானையை விரட்டி, வனக்காவலர் தர்மலிங்கம் என்பவரை வாய்க்காலில் இறக்கி குட்டியை மேலே ஏற்ற முயற்சி செய்தனர். இதில் வனக்காப்பாளர்கள் திருமூர்த்தி, கேசவமூர்த்தி, வனக்காவலர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகுகுட்டியை மீட்டு தாய் யானையிடம் சேர்த்தனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.