ஈரோடு: சத்தியமங்கலத்தில், பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி பங்கேற்றார். விழாவில் பேசியஅவர், “மோடி ஆட்சி மக்களவையில் பெண்களுக்கு 3 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு அளித்துள்ளது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தான் சமூக நீதி.
சமாதானத்தை வளர்க்கிறோம் சனாதனத்தை எதிர்க்கிரோம் சமாதானத்தில் பெண்களுக்கு வாழ்வுரிமை, வேலை உரிமை, படிப்பு உரிமையை வலியுறுத்துகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றும் திட்ட மசோதாக்களுக்கு கவர்னர் கையெழுத்து இடுவதில்லை.
ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. புத்தகத்தில் எழுத்தப்பட்ட சனாதானத்தை ராசா சொன்னார். ஆனால் அவர் சொன்ன மாதிரி திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது அறிவு நாணய கேடு.
நீலகிரி டான்டீ தொழிலாளர்களுக்கு தேவையான வீடுகளை ஒதுக்கி தருவதாகவும் அவர்களை வெளியேற்றுவதில்லை என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அண்ணாமலை போராட்ட களத்தில் இறங்குவோம் என முடிந்த போன பிரச்சனையில் இறங்குகிறார்” என குற்றச்சாட்டினர்.
இதையும் படிங்க: அரசு கேபிள் டிவிக்கு தடையின்றி சிக்னல் வழங்க கோரி கேபிள் ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்