ETV Bharat / state

தேர்தல் நடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்! - சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் விதிகளை முழுமையாக கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கதிரவன் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்!

author img

By

Published : Feb 28, 2021, 2:52 PM IST

ஈரோடு : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (பிப்.26) அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைமை மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பின்னர் ஊடகங்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், “ தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 26ஆம் தேதியன்று தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது. அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடித்து எதிர்வரும் சட்டபேரவைத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

திங்கள் கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், திட்ட முகாம்கள் ஆகியவை சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவு பெற்ற பின்னரே மீண்டும் நடத்தப்படும். அதுவரை பொது மக்களில் தங்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்க்கும் மனுக்களை அளிக்கும் பெட்டியில் போடலாம். அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு 24 மணி நேரமும் செயல்படும்.

தேர்தல் தொடர்பான புகார்களை சேலம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி வழியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஊடகங்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன்

தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் நடத்தலாம். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளின்படி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் இவற்றை மேற்கொள்ளலாம்.

கரோனா பெருந்தொற்றை கருத்திற்கொண்டு, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், விரைவாக வாக்களிக்கவும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அந்த வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், 8 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் முரண்பாடு! - நீதிபதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.