ETV Bharat / state

திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் - சசிகலா

திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் - சசிகலா
திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் - சசிகலா
author img

By

Published : Sep 14, 2022, 9:59 AM IST

ஈரோடு: சசிகலா தற்போது ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தொண்டர்களிடையே உரையாற்றிய சசிகலா, “பெண் சிசு கொலையை தடுக்க ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம். பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இதற்கு மூடுவிழா நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

15 மாத ஆட்சி்யில் மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை. ஆவின் பால் , சொத்து வரி , மின் கட்டணம் உயர்ந்துள்ளது. . மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். திமுக மக்கள் விரோத அரசு. விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர்.

திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் - சசிகலா

பல்வேறு கட்டணங்களை உயர்த்தி மக்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும். மீண்டும் அதிமுகவை வலிமையாக கொண்டு வருவதுதான் எனது ஓரே குறிக்கோள்.

எவ்வித சோதனைகள் இயக்கத்திற்கு ஏற்பட்டாலும் கட்சியை வலுப்படுத்தி யாராலும் அசைக்க முடியாத சக்தியாக மாற்றுவோம். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பி முடிவு கட்டுவோம்” என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு யார் பொதுச் செயலாளர் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்... சசிகலா!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.