ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது.
திமுக கட்சி சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்ரவரி 3ஆம் தேதி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் ஈரோடு மாநகராட்சி ஆணையருமான சிவகுமாரிடம் வழங்கினார்.
நேற்று வரை 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று கடைசி நாள் என்பதனால் அதிக எண்ணிக்கையிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாடு அரசியலில் 'இது' மட்டும் நடக்கவே நடக்காது - ஜெயக்குமார் திட்டவட்டம்!