2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் விவசாயத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் விவசாய சங்கத் தலைவர் தெய்வசிகாமணி நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், '' மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை ஏற்புடையதாக இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் 16 அம்ச திட்டங்களை அறிவித்திருந்தார். அதனைப் புதிய மொந்தையில் அளிக்கப்பட்ட பழைய கள்ளாகத்தான் பார்க்கிறோம். கடனில் இருக்கும் விவசாயிகளை மீட்பதற்காக கடன் ரத்து அறிவிப்பு எதுவும் இல்லை. ஏற்றுமதிக்கான சரியான வாய்ப்புகள் பற்றி பேசப்படவில்லை. விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாததால் நமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாபகரமான வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. விவசாயி வருமானம் பூஜ்ஜியமாகத்தான் இருக்கிறது. காவிரி-கோதாவரி இணைப்பு பற்றி இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளை பொறுத்தவரை லாபகரமாக விலை என்று கிடைக்கிறதோ அன்றுதான் விவசாயம் உருப்படும். எனவே இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்ஜெட்2020: புதிய தொழில் முயற்சி நிறுவனங்களுக்கு என்ன பலன்?