ETV Bharat / state

நெல் நடவுப்பணியில் ஈடுபட்ட வேளாண் மாணவிகள்! - ஈரோடு

ஈரோடு: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் நெல் நடவுப்பணியில் ஈடுபட்டனர்.

agri student
author img

By

Published : Oct 8, 2019, 4:51 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் 11 பேர் மூன்று மாதங்கள் அப்பகுதியில் தங்கி விவசாயம் குறித்த செயல்விளக்கம், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி கிராமத்தில் செல்வக்குமார் என்ற விவசாயி வயலில் கூலியாட்களுடன் இணைந்து மாணவிகளும் நெல் நடவுப்பணியை மேற்கொண்டனர். அப்போது நெல் வயலை உழவு செய்து தயார் படுத்துவது, சேராக்கி மாடு பூட்டி சமப்படுத்துவது, நெல் நாற்றுகளைப் பிடிங்கி கத்தையாக்கி நெல் நடவை மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

நடவுப்பணியில் ஈடுபட்ட வேளாண் மாணவிகள்!

மேலும், கூலியாட்களுடன் இணைந்து நெல் நடவு பணியை எவ்வாறு மேற்கொள்வது என்று பயிற்சி பெற்ற மாணவிகள் மட்டுமே, தனி வயலில் நெல் நடவு பணியை மேற்கொண்டு அசத்தினர்.

இதையும் படிங்க: கெட்டிமேளம் முழங்க நாதஸ்வர இசையுடன் மாணவர் சேர்க்கை!

Intro:Body:tn_erd_06_sathy_agri_student_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவானி கிராமத்தில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் நெல் நடவுப்பணியில் ஈடுபட்டனர்…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கோவை வேளாண்மை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் 11 பேர் மூன்று மாதங்கள் தங்கி விவசாயம் குறித்த செயல்விளக்கம் புதியதொழில்நுட்பங்களை புகுத்துதல் விவசாயிகள் விளைபொருட்களை மதிப்புக்கூட்டல் முறையில் விற்பனை மேற்கொள்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி கிராமத்தில் செல்வக்குமார் என்ற விவசாயி நெல் வயலில் கூலியாட்களுடன் இணைந்து நெல் நடவுப்பணியை மேற்கொண்டனர். அப்போது நெல் வயலை உழவு செய்து தயார் படுத்துவது சேராக்கி மாடு பூட்டி சமப்படுத்துவது நெல் நாற்றுகளை பிடிங்கி கத்தையாக்கி நெல் நடவை மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். மேலும் கூலியாட்களுடன் இணைந்து நெல் நடவு பணியை எவ்வாறு மேற்கொள்வது என்று பயிற்சி பெற்று மாணவிகள் மட்டுமே தனி வயலில் நெல் நடவு பணியை மேற்கொண்டு அசத்தினர். கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவிகளும் 90 நாட்கள் கிராமங்களில் தங்கி வேளாண்மை குறித்த அனுபவத்தை பெற வேண்டும் என்ற விதியின் கீழ் இம்மாணவிகள் கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் தங்கி விவசாயிகளுடன் ஒன்றிணைந்து விவசாய பணிகளில் ஈடுபட்டும் விவசாயிகளுடன் கலந்துடையாடியும் வேளாண்மை குறித்த பல்வேறு பயிற்சிகளில் மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பல்கலைக்கழகத்தில் படித்த வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து மகசூலை பெருக்க அவ்வாறு செயல்படுமாறும் அறிவுறுத்திவருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.