தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் வேளாண் கருவிகள் வாடகை மையம் ஏற்படுத்தப்பட்டு மகளிர் கூட்டமைப்பினரிடம் மானிய விலையில் வாங்கப்பட்ட வேளாண் கருவிகளை தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது.
![erode district news ஈரோடு மாவட்டச் செய்திகள் admk mlas drive tractor admk mla thennarasu drive tractor](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-02-mla-fund-script-vis-7205221_11082020134419_1108f_01025_1083.jpg)
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கதிரம்பட்டி, பேரோடு, எலவமலை, மேட்டு நாசுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிராக்டர், வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை ஈரோடு மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்கம், கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு ஆகியோர் இணைந்து வழங்கினர். முன்னதாக, இருவரும் மக்கள் மத்தியில் டிராக்டர் ஓட்டி அசத்தினர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் டிராக்டர் ஓட்டிய அமைச்சர் செங்கோட்டையன்!