ஈரோடு: திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் செங்கோட்டையின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதில், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாகக் குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும்,
அம்மா கிளினிக் வெற்றிகரமாக நடத்திய அதிமுக
அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும் திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளரைச் சந்தித்து செங்கோட்டையன், ”கடந்த அதிமுக அரசு 2500 அம்மா கிளினிக் மையத்தை கிராமங்கள்தோறும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியது.
ஆனால் தற்போதைய திமுக அரசு அதை முடக்கி இல்லம் தேடி மருத்துவத் திட்டம் என்ற பெயரில் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள், அவர்கள், எங்கே மக்களைத் தேடினார்கள், எங்கே மருத்துவம் நடைபெறுகிறது?
ஆளும் அரசு மெத்தனப்போக்கு
ஆளும் திமுக அரசு அனைத்துத் திட்டங்களிலும் மெத்தனப்போக்கை கடைப்பிடித்துவருகிறது. இனிவரும் நாள்களில் ஈரோடு மாவட்டம் என்றுமே அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பதக்கங்களைக் குவிக்கும் தலைமைக் காவலர் ராமு - பாராட்டிய மத்திய மண்டல ஐஜி