ETV Bharat / state

'விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்' - விஜய்வசந்த் - Actor Vijay vasanth joined farmers protest

ஈரோடு: பெருந்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Congress party members in erode
Actor Vijay vasanth
author img

By

Published : Dec 12, 2020, 3:41 PM IST

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தியின் பிறந்த நாள், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏர் கலப்பை ஆர்ப்பாட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பழைப்பாளராகக் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான விஜய் வசந்த், சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து விவசாயத்திற்குப் பயன்படுத்தும் ஏர் கலப்பைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய்வசந்த், "டெல்லியில் நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற்றிடும் வரை தங்களது போராட்டம் தொடரும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறிக் கொண்டே பாஜக சொல்வதை செயல்படுத்தி வருகிறார்.

விவசாயிகள் விளைவிக்கிற பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையில்லாத ஜனநாயக நாட்டில், கார்ப்பரேட் நிறுவனம் விவசாயப் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் கொடுமை நடப்பது விவசாயிகளை அடிமையாக நடத்தும் செயல். தமிழ்நாட்டில் 70 விழுக்காடுள்ள விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.