ETV Bharat / state

உயிருக்குப் போராடும் பெண்ணை மீட்காமல் புகைப்படம் எடுத்த பொதுமக்கள்

ஈரோடு: சாலை விபத்தில் உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு முதலுதவி செய்யாமல் ஆங்காங்கே செல்லிடப்பேசியில் படம்பிடிக்கும் மனிதாபினமான செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Accident in erode
Accident in erode
author img

By

Published : Feb 22, 2020, 9:04 PM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில், உறவினர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக சத்தியமங்கம் கடம்பூர் மலைப்பகுதி கரளையம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி, அவரது மனைவி மாதேவம்மாள், மகன் சந்தோஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

உயிருக்கு போராடும் பெண்ணை காப்பாற்றாமல் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுக்கும் நபர்கள்.

பர்கூர் முதலாவது வளைவில் திரும்பும் போது, எதிரே வந்த டிப்பர் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி மாதேவம்மாள் இடதுகாலில் முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார், மகன் சந்தேஷ் மட்டும் காயமின்றி உயிர்தப்பினர்.

இந்த விபத்து நடத்த சில நிமிடங்களில், அவ்வழியாக 20க்கும் மேற்பட்டோர் இருந்தபோதும் கூட உயிருக்கு போராடிய மாதேவம்மாளை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் விபத்து குறித்து பேசிக்கொண்டிருப்பதும் செல்போனில் படம் எடுப்பதுமாக வீடியோ வெளியாகியுள்ளது.

முதலுதவி சிகிச்சை தெரியாத மலைவாசி ஒருவர், அப்பெண்ணுக்கு உதவி செய்ய முயற்சி எடுத்துள்ளார். மேலும் தாய் உயிருக்குப் போராடுவதையும் கண்முன்னே காணும் சிறுவன் சந்தோஷ் அம்மா, அப்பா என அழுகை குரல் கேட்கிறது. ஆனால், அச்சிறுவனுக்கு யாரும் ஆறுதல் கூட அளிக்கவில்லை.

அரை மணி நேரத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மாதேவம்மாள் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். விபத்து நடந்த இடத்தில் வாகன ஓட்டிகள் இருந்த நிலையில் கூட, அவர்களுக்கு எவரும் மனிதாபிமான முறையில் உதவி செய்ய முன்வராதது, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொத்துக்காக அண்ணன், அண்ணியை கொலைசெய்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.