ETV Bharat / state

கணவர் இறந்த துக்கத்தில் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்! - They sent him to Perundurai Government Medical College Hospital

கணவர் இறந்த துக்கத்தில் மகனுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவர் இறந்த துக்கத்தில் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!

author img

By

Published : Aug 10, 2022, 10:40 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆசிரியர் நகரைச்சேர்ந்தவர், லோகநாதன். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும் ஹரிகுக விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

ஹரிகுக விக்னேஷ் வாய்க்கால் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். லோகநாதன் கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு விபத்தில் லோகநாதன் படுகாயமடைந்ததால் தனியார் நிறுவனத்திற்கும் வேலைக்குச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மகனின் கல்விச்செலவு, குடும்பம் நடத்த முடியாத நிலையில் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்த நிலையில் இருந்த லோகநாதன் நேற்று மாலை மகன் ஹரிகுக விக்னேஷை டியூசனுக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுவிட்டுவிட்டு, வீடு திரும்பும் வழியில் கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார்.

லோகநாதன் இறந்து விட்ட தகவலை இன்று உறவினர்கள் லோகநாதனின் மனைவி பத்மாவதியிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த பத்மாவதி, மகன் ஹரிகுக விக்னேஷ்க்கும் ’’சல்பாஸ்’’ எனும் விஷம் மாத்திரைகளை கொடுத்துவிட்டு, பத்மாவதியும் மாத்திரைகளை தின்று மயங்கிய நிலையில் இருந்தனர். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து பத்மாவதியும், ஹரிகுக விக்னேஷும் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:முதல்முறை... மாமல்லபுரத்தில் "சர்வதேச பட்டம் விடும்விழா"; இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.