ETV Bharat / state

வறுமையின் பிடியில் இருந்த குடும்பம்; மீட்டு காப்பகத்தில் அனுமதி! - 2 dead bodies in Erode

கோபிசெட்டிபாளையம் அருகே உயிரிழந்த தாயார் மற்றும் கணவரின் சடலத்துடன் 7 நாட்கள் வரை வீட்டிலிருந்த பெண்ணையும் அவரது மகனையும் தனியார் காப்பகத்தினர் மீட்டு அவர்களை காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். உடல்நலக்குறைவாக உள்ள அப்பெண்ணின் மகனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 14, 2023, 8:46 PM IST

வறுமையின் பிடியில் இருந்த குடும்பம்; மீட்டு காப்பகத்தில் அனுமதி!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே வறுமையின் காரணமாக இறந்தவர்களின் உடல்களுடன் 7 நாட்கள் வசித்து வந்த குமணன் வீதியைச் சேர்ந்த தாய், மகனை ஈரோட்டை சேர்ந்த தனியார் காப்பகத்தினர் மீட்டு தாய் சாந்தியை அவர்களது காப்பகத்திற்கும்; மகன் சரவணகுமாரை சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.

கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி கனகாம்பாள்(80). இவருடைய மகள் சாந்தி(60). சாந்திக்கு திருமணமான பின்பு கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார்(34), மகள் சசிரேகா ஆகியோருடன் தனது தாயார் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சாந்தியின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சாந்தியின் கணவரும், அவரது தாயாரும் அழுகிய நிலையில் சடலங்களாக கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இதுகுறித்து சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டபோது இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய பணம் இல்லாதது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி நல்லடக்கம் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், ஈரோட்டில் உள்ள தனியார் காப்பகத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தனியார் காப்பகத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சவரணக்குமாரை மீட்டு, தாயுள்ளத்துடன் அவரை கவனித்துப் பின், சிகிச்சைக்காக பெருந்துறை அரசு கல்லூரி மருத்துவனைக்கும், அவரது தாய் சாந்தியை மீட்டு ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்திற்கும் நகராட்சி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையில் காவல் துறையினருடன் அழைத்துச் சென்றனர்.

வறுமையில் பிடியில் இருந்த குடும்பம்; மீட்டு காப்பகத்தில் அனுமதி!

முன்னதாக, வறுமையினால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய முடியாமல் 7 நாட்கள் இறந்தவர்களுடன் இருந்துவந்த செய்திகள் செய்தித்தாள்களிலும், ஊடகங்கள் வாயிலாக வெளி வந்ததையொட்டி அப்பகுதி பொதுமக்கள் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: வறுமை கொடிது - கணவர், தாயார் உடலை அடக்கம் செய்யமுடியாமல் வீட்டிலேயே வைத்திருந்த பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.