ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சூசைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லியோபிரசாந்த். இவர் விவசாயத் தொழில் செய்துவருகிறார். லியோபிரசாந்த் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை நான்காண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரது காதலுக்கு லியோபிரசாந்த் வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொள்ளவதற்காக மேட்டூரில் உள்ள லியோபிராசாந்தின் மூத்த சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து, கடந்த மாதம் 18ஆம் தேதி லியோபிரசாந்த் தனது சகோதரி வீட்டில் நண்பர்கள் முன்னிலையில் காதலியை திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்தவுடன் லியோபிரசாந்த் தனது காதல் மனைவியை அன்னூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று நான்கு நாள்கள் தங்கியுள்ளார். அதன்பின், இருவரும் தாளவாடி வந்தனர். பின்னர் காதல் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றுவருதாகக் கூறி வெளியே சென்றார்.
ஆனால் லியோபிரசாந்த் திரும்ப வரவில்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதிலும் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, இளம்பெண் புகார் தெரிவித்து கிராம மக்கள் முன்னிலையில் ஊர் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் காதல் மனைவியை ஏற்காமல் லியோபிரசாந்த் ஏமாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காதல் கணவனை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண்ணும் அவரது உறவினர்களும் நேற்று காலை முதல் சூசைபுரம் பேருந்து நிறுத்தத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்ததையடுத்து காதல் கணவன் உள்பட ஏழு மீது போக்சோ சட்டத்தின் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா