ETV Bharat / state

கட்டுப்பாட்டை இழந்த லாரி: உயிர் தப்பிய ஓட்டுநர்

author img

By

Published : May 18, 2021, 1:07 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்துகுள்ளான லாரி
விபத்துகுள்ளான லாரி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் வகையில், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிய லாரி ஒன்று, கர்நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. திம்பத்தை அடுத்த சீவக்காய் பள்ளம் வளைவில் லாரி திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த ஆசனூர் காவல் துறையினர், ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை செலுத்த அவகாசம் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.