கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியிலிருந்து மக்காச்சோள மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரி சத்தியமங்கலம் அடுத்துள்ள சாணார்பதி பிரிவு அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் திருப்பியபோது லாரி கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் லாரி சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் லாரி கவிழ்ந்ததால் மக்காச்சோள மூட்டைகள் சிதறின. இதையடுத்து இந்த விபத்து குறித்து புளியம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டிப்பர் லாரி மோதல்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பெண்!