ஈரோடு: அருகே தாளவாடி மலைப்பகுதி அடுத்து பாளையம் கிராமத்தில் சாய்பாபா கோவில் அருகே 50 வயதுபெண் யானை நடக்கமுடியாமல் படுத்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பரிசோதனை செய்துநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதை உறுதி செய்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவர் சதாசிவம் யானைக்கு திரவ உணவு அளித்தும் குளுகோஸ் செலுத்தி சிகிச்சை அளித்தார். காட்டு யானை எழுந்து நிற்பதற்கு உதவுவதற்காக பொக்லைன் இயந்திரம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பெண்யானை இன்று( ஜூலை07) உயிரிழந்தது. யானை இறந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் யானைக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். யானையின் உடல் வனப்பகுதியில் பிற விலங்குகளுக்கு உணவாக விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:விடைபெற்றது "மிஸ்டர் கபினி"