ETV Bharat / state

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் ரூ.5.5 லட்சம் பணம் பறிமுதல்! - erode latest news

ஈரோடு: தமிழ்நாடி-கர்நாடக எல்லையான தாளவாடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5.5 லட்சம் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பணம் பறிமுதல்
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் ரூ.5.5 லட்சம் பணம் பறிமுதல்
author img

By

Published : Mar 21, 2021, 6:29 PM IST

ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடி அருகே, பண கடத்தலைத் தடுப்பதற்காக, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வந்த தனபால் என்பவரின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்களின்றி ரூ.5.5 லட்சம் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. தனபாலுடன் மேலும் ஒருவர் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் தனபாலுடன் வந்தவர் யார் என்று விசாரித்தபோது, சின்னச்சாமி என்பவர் மங்களூரில் கோழிகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை எடுத்து வரும்போது சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் அதற்குரிய ஆவணங்களை காட்டாத காரணத்தால் பணத்தை பறிமுதல் செய்து, சத்தியமங்கலம் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் அப்பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'பாஜக அரசை தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்’ - வைகோ கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.