ஈரோடு: மூலப்பாளையத்தில் தட்சிணாமூர்த்தி என்பவரது பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் கடந்த 23ம் தேதி டீசல் பாக்கெட்டுகளை வீசி சென்றுள்ளனர். வழக்கம் போல கடையை திறந்து பார்த்தபோது டீசல் பாக்கெட்டுகள் கிடந்ததை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உடையாத நிலையில் இருந்த டீசல் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 4 பேரை தாலுக்கா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கலில் ரகுமான், சதாம் உசேன்,ஜாபர் சாதிக், மற்றும் ஆசிக் அலி ஆகிய நால்வரும் எஸ்டிபிஐ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தட்சணாமூர்த்தி கடையில் மரச்சாமான் வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் டீசல் பாக்கெட்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தட்சிணாமூர்த்தி ஈரோடு தெற்கு மாவட்ட பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலாளிக்கு துரோகம் செய்த ஓட்டுநர் - பண்ணை வீட்டில் வைத்திருந்த ரூ.27 லட்சம் திருட்டு