ETV Bharat / state

வாகன சோதனையில் சிக்கிய யானை தந்தங்கள்... 4 பேர் கைது - 4 people arrested for elephant ivory smuggling

ஈரோடு: தூக்கநாயக்கன்பாளையத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இரண்டு யானை தந்தங்களை கடத்த முயன்ற 4 பேரை வனத் துறையினர் கைது செய்துள்ளனர்.

யானை
யானை
author img

By

Published : Jul 29, 2020, 10:47 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனப்பகுதியிலிருந்து தந்தம் கடத்துவதாக கணக்கம்பாளையம் பிரிவு வனத்துறையிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி வனத்துறையினர் சோதனையிட்டதில் இரு யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பைக்கில் யானை தந்தம் கடத்திய குற்றத்திற்காக தொட்டகோம்பை பழனிச்சாமி(50), அந்தியூர் அங்கப்பன்(54), ஆண்டவன்(47), கோவிந்தராஜன் (41) ஆகியோரை கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து ஐந்து அடி நீளமுள்ள இரண்டு யானை தந்தங்களையும், இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள், தொட்டகோம்பை பகுதியில் கிடந்த இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்களை திருடியுள்ளது தெரியவந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.