ஈரோடு: காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிப்பாளையத்தில் உலகப் புகழ்பெற்ற பைரவர் கோயில் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் நுழைவாயிலில் உலகின் மிகவும் பிரமாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கோயில் கட்டுமானப் பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இங்கு உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி உயரத்தில் காலபைரவர் சிலை மிக பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை யுனிக்யூ வேர்ல்ட் ரெக்கார்ட் (unique world record) எனும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இன்று இந்த சாதனை விருதினை யுனிக்யூ சாதனை புத்தகம் என்ற பஞ்சாப் அமைப்பின் தென்னக பொறுப்பாளரான ரகுமான், பைரவர் ஆலயத்தின் பொறுப்பாளரான விஜய் சுவாமிக்கு, வீட்டு வசதி வாரிய அமைச்சர் சு. முத்துசாமி முன்னிலையில் வழங்கினார்.
இதையும் படிங்க: Karthigai Deepam: அண்ணாமலையார் தீபம் ஏற்றும் திரிக்கு சிறப்பு பூஜை!