ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே கொத்தமங்கலம் வனப்பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதாக பவானிசாகா் வனச் சரக அலுவலா் மனோஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வேட்டைத்தடுப்பு காவலா்கள், வனத்துறை ஊழியா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொத்தமங்கலம் என்ற பகுதியில் காட்டுப் பன்றி இறைச்சியைப் பிரித்து பங்கிட்டு விற்க முயற்சித்த கொத்தமங்கலம், நெரிஞ்சிப்பேட்டையைச் சோ்ந்த கருப்புசாமி (59), இறைச்சியை வாங்கி சமைத்த ரவி (49), ராஜன்நகர் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் (39) ஆகிய 3 பேரையும் பிடித்தனர்.
அவா்கள் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனர். இதையடுத்து காட்டுப்பன்றி வேட்டையாடிய குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா ரு.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரு.18 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
இதையும் படிங்க: முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நபர் கைது