ETV Bharat / state

உயிரிழந்த யானையின் உடலில் இருந்து தந்தம் திருட்டு - 3 பேர் கைது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த யானையின் உடலில் இருந்து தந்தத்தை திருடியது தொடர்பாக 17 வயது சிறார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்த யானையின் உடலில் இருந்து தந்தம் திருட்டு- 3 பேர் கைது

author img

By

Published : Jul 24, 2022, 10:46 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் எக்கத்தூர் பிரிவு, ஆலமரத்து சரிவு பகுதியில் நோயால் உயிரிழந்த ஆண் யானையின் தந்தங்கள் திருடப்பட்டன. இதுகுறித்து கடம்பூர் வனத்துறையினர் விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் யானையின் தந்தத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

விசாரணையில் அத்தியூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், செங்கோட்டையன் (45), மற்றும் சடையப்பன் (40) என்றும் உயிரிழந்த யானை உடலில் ஆசிட் ஊற்றி தந்தத்தை திருடி வெளிச்சந்தையில் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரை கைது செய்த வனத்துறையினர் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது வனத்துறையினர் இந்த தந்தம் யாருக்கு விற்கப்பட்டது, சர்வதேச தொடர்பு உள்ளதா போன்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மின்வெளியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.