ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஆக உள்ளது. இதில் 4 பேர் கோவையிலும் ஒருவர் திருச்சியிலும் சிகிச்சைப் பெற்று, திரும்பி உள்ளனர். பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் மட்டும், கடந்த வாரம் உயிரிழந்தார்.
கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 32 பேர், ஏற்கெனவே பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 28 நபர்கள் முழுமையாகக் குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குணமடைந்தவர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி கைகளை தட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், "வீடு திரும்பிய அனைவரும் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். ஈரோட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட அலுவலர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சமூக இடைவெளியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'கேள்விலாம் கேக்காத நா பதில் சொல்லுவேன்' - காவலர்களுடன் அதிமுக பிரமுகர் ரகளை