ETV Bharat / state

'2,700 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்' - ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல்! - ஈரோடில் 2700 ஆழ்துளைக்கிணறுகள் மூடல்

ஈரோடு: பயன்பாட்டில் இல்லாத 2,700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார்.

erode
author img

By

Published : Nov 7, 2019, 11:21 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென நகர்ப்பகுதியில் உள்ள சாலைகளில் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு, பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் படித்துறை பகுதியில் கழிவு நீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின் மயானம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாதாளச் சாக்கடை திட்டத்தில் வரும் கழிவு நீர், பவானி ஆற்றங்கரையில் கலக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறி, சத்தியமங்கலம் நகர்ப்பகுதி பொதுமக்கள், அனைத்துக்கட்சியினர் ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் சுத்திகரிப்பு நிலையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர். மேலும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் இப்பிரச்னை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினர், பொது மக்கள் பவானி ஆற்றங்கரையில் பாதாளச் சாக்கடை கழிவுகள் கலக்கக் கூடாது எனவும்; ஆற்றங்கரையோரம் விதிமுறைகளுக்கு முரணாக கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும், சுத்திகரிப்பு நிலையத்தையும் நகர்ப்பகுதியிலிருந்து 5 கி.மீ., தூரம் தள்ளி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டம்

அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் குறித்து சென்னையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு குழிதோண்டப்பட்டு பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 2,700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக ஆழ்துளைக்கிணறுகள் மூடப்படும்" என்றார்.

இதையும் வாசிங்க : ‘சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றிருந்தால் சுஜித்தை காப்பாற்றியிருக்கலாம்’

Intro:Body:tn_erd_01_sathy_borewell_collector_vis_tn10009

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பயன்பாட்டில் இல்லாத 2700 ஆழ்துளைக்கிணறுகள் மூடப்பட்டுள்ளது: சத்தியமங்கலத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பயன்பாட்டில் இல்லாத 2700 ஆழ்துளைக்கிணறுகள் மூடப்பட்டுள்ளது என்றும் சத்தியமங்கலம் நகராட்சியில் அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது சம்பந்தமாக உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் ரூபாய் 55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென நகர்ப்பகுதியில் உள்ள சாலைகளில் குழி தோண்டி பைப்லைன் பதிக்கப்பட்டு பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் படித்துறை பகுதியில் கழிவு நீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின்மயானம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடை திட்டத்தில் வரும் கழிவு நீர் பவானி ஆற்றங்கரையில் கலக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி சத்தியமங்கலம் நகர்ப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் சுத்திகரிப்பு நிலையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் இப்பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பவானி ஆற்றங்ங்கரையில் பாதள சாக்கடை கழிவுகள் கலக்க கூடாது எனவும் ஆற்றங்கரையோரம் விதிமுறைகளுக்கு முரணாக கழிவு நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை நகர்ப்பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் தள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் குறித்து சென்னையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. நகராட்சிப்பகுதியில் பாதாளசாக்கடை திட்டத்திற்கு குழிதோண்டப்பட்டு பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் மேலும் கூடுதலாக 12 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும் ஈரோடு மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 2700 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக ஆழ்துளைக்கிணறுகள் மூடப்படும் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.