ஈரோடு மாவட்டத்தில் 136 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டம் சென்ற இருவருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்களது தொற்று எண்ணிக்கையும், ஈரோடு மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 157 பேர் என உயர்ந்தது.
மொடக்குறிச்சி, கோபி, சித்தோடு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவரும், ஈரோடு மாநகராட்சி பகுதியான ஆர்.என்.புதூர், மூலப்பாளையம், சூரியம்பாளையம், திண்டல், மாணிக்கம்பாளையம் போன்ற பகுதியை சேர்ந்த 16 பேரும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று ஏற்பட்டவர்களில் 15 பேருக்கு, மற்றவர்கள் மூலம் ஏற்பட்டது. ஒருவர் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர். மீதமுள்ள மூவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என உறுதியான தகவல் தற்போது வரை தெரியவில்லை.
இதனிடையே மாவட்ட அளவில், மூன்று ஆயிரத்து 522 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நான்கு பேர் இறந்துள்ளனர். 80 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் பரிசோதனை முகாம் - ஆட்சியர் உத்தரவு