ETV Bharat / state

தமிழ்நாட்டுக்குள் நுழைய முயன்ற பிகார் இளைஞர்கள்: திருப்பியனுப்பிய கர்நாடக காவல் துறை - erode corona updates

ஈரோடு: தமிழ்நாட்டுக்குள் நுழைய முயன்ற பிகார் இளைஞர்கள் 18 பேரை புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் கர்நாடக காவல் துறையினர் திருப்பியனுப்பினர்.

பீகார் இளைஞர்களைத் திருப்பி அனுப்பிய கர்நாடக காவல்துறை

author img

By

Published : Mar 24, 2020, 12:09 PM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், ஒரே காரில் முகச்கவசம் ஏதுமின்றி பிகார் இளைஞர்கள் 18 பேர் தமிழ்நாடு கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் நுழைய முயன்றனர். எட்டு பேர் வரக்கூடிய அக்காரில், வாகன விதிகளுக்குப் புறம்பாக 18 பேர் அமர்ந்து வந்தது மட்டுமல்லாமல், கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அலட்சியப்படுத்தியுள்ளனர்.

அறியாமையில் பயணித்த அந்தக் குழுவினரைத் தடுத்துநிறுத்திய கர்நாடக காவல் துறையினர், நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக்கூறி திருப்பியனுப்பினர்.

பிகார் இளைஞர்களைத் திருப்பியனுப்பிய கர்நாடக காவல் துறை

தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதியான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி, காரப்பள்ளம் ஆகிய இரு சோதனைச்சாவடிகளிலும் காவல் துறையினர் வாகனங்களை ஆய்வுசெய்து, பயண விவரங்களைக் கேட்டறிந்து பின்னரே அனுமதிக்கின்றனர்.

அதேபோல, இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் தமிழ்நாட்டுக்குச் செல்லும் வாகனங்களைப் பதிவுசெய்து அனுப்பும் பணியில் கர்நாடக காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

கர்நாடக பதிவெண்கொண்ட வேன், கார் ஆகிய வாகனங்கள் தமிழ்நாட்டுக்குள் செல்ல அனுமதி மறுத்து திருப்பியனுப்பப்பட்டது. இருமாநில எல்லையில் உள்ள தாளவாடிக்குப் புளிஞ்சூர் வழியாகச் செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.