ETV Bharat / state

கருமுட்டை விற்பனை விவகாரம்: பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி! - 16 year old girl egg sale problem

ஈரோடு மாவட்டத்தில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் உள்ள 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி!

author img

By

Published : Jun 29, 2022, 8:18 PM IST

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி அரசு கூர்நோக்கு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிறுமி தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என பாதுகாவலரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி கழிவறையில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அரசு காப்பகத்தில் இருந்து சிறுமியை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இதுகுறித்து ஈரோடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியருக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் மாணவிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.