ஈரோடு மாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து இன்று (ஜூன் 25) காலை 8:45 மணிக்கு ஊட்டியை நோக்கி அரசு பேருந்து கிளம்பியது. இந்தப் பேருந்தை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (54) ஓட்டினார். நடத்துனராக வெள்ளியங்கிரி பணியிருந்தார். பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த போருத்து ஜி.ஹெச் ரவுண்டானாவை தாண்டி சென்றுகொண்டிருந்த போது, எதிரே சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்வதற்காக சக்திவேல் முயன்றார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மேம்பால தூணில் மோதியது. இதனால் சக்திவேல் உள்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
குறிப்பாக திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (55 ) என்பவர் பலத்த காயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் அப்பகுதியில் பல நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஐம்பொன் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயன்ற இருவர் கைது