ETV Bharat / state

12ஆம் வகுப்பு வினாத்தாள் திருத்தும் பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு: 12ஆம் வகுப்புக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் நாளை (மே 27) துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

12 exam center
12th standers exam paper correction collector Review
author img

By

Published : May 26, 2020, 9:15 PM IST

மார்ச் மாதம் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிவு பெற்றன. கரோனா பாதிப்புகளால் வினாத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் 12ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் நாளை (மே 27) காலை முதல் 12 நாட்களுக்கு நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டதில் மொத்தமாக ஆறு மையங்களில் 12ஆம் வகுப்பு வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன. அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை செய்து வந்த நிலையில் இன்று அந்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் “ஈரோடு மற்றும் கோபியை பொறுத்தவரை ஆயிரது 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ளனர். விடைத்தாள் திருத்தும் மையங்களில் தகுந்த இடைவெளியுடன் ஒரு அறைக்கு 8 ஆசிரியர்கள் மட்டுமே அமர்ந்து பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளனர்.

ஆசிரியர்கள் வந்து செல்ல பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, விடைத்தாள் திருத்தும் மையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் முகக் கவசம், கிருமி நாசினிகள் வழங்கப்படுவதோடு மட்டுமின்றி வினாத்தாள் திருத்தும் மையங்களில் வருகிற ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திண்டுக்கல்:

ஒட்டன்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களை ஆய்வு செய்தார். ஆய்வில் ”விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்கள் தகுந்த இடைவெளியுடன் இருக்கவும், கிருமி நாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

dindigul 12th exam paper correction center
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு

மேலும் இந்த ஆய்வின் போது பழனி சார் ஆட்சியர் உமா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சென்னை - தூத்துக்குடிக்கு விமான சேவை தொடக்கம்; ஆட்சியர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.