ETV Bharat / state

'தேர்வுக்கு முன்பே வெளியான வினாத்தாள்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன' - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: அரையாண்டுத் தேர்வில் 10,12 ஆகிய வகுப்புகளில் வெளியான வினாத்தாள்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10th-12-th-leaked-half-yearly-exam-question-papers-have-been-changed-says-minister-sengottaiyan
அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Dec 24, 2019, 10:01 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், குருமந்தூர், கோசனம், கெட்டிச்செவியூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டிடும் வேட்பாளைர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வாகனத்தில் நின்று பரப்புரையில் ஈடுபட்டார்.

பரப்புரையின்போது அந்தந்த ஊராட்சிகளில் போட்டிடும் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாவட்ட உறுப்பினர்கள் என அனைவருக்கும் அவரவர்களின் சின்னங்களில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ் நாடு அரசு ஊராட்சிகளுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளதாகவும் அது போல் ஊராட்சிகளில் மென்மேலும் வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற வேண்டுமெனில் அதிமுக சார்பில் போட்டிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரவேண்டியுள்ளது. தேர்தல் முடிந்ததும் அந்தத் தொகை உள்ளாட்சிகளுக்கு வந்து சேரும். அப்போது கிராமங்களுக்கு அனைத்துத் திட்டங்களும் விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.

'தேர்வுக்கு முன்பே வெளியானதான வினாத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளன' - அமைச்சர் செங்கோட்டையன்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அரையாண்டுத் தேர்வில் 10, 12 ஆகிய வகுப்புகளின் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதற்கு தேர்வுத்துறை சார்பில் வினாத்தாள்கள் குறுந்தகடு வடிவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. அது எங்கு வெளியாகிறது என்று தெரியவில்லை. ஆதலால் வெளியான வினாத்தாள்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

இப்பரப்புரையில் நம்பியூர் ஒன்றியச் செயலாளர், அதிமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க:

கரூரில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு விரைவில் தீர்வு: பரப்புரையின்போது அமைச்சர் உறுதி!

Intro:Body:tn_erd_05_sathy_education_minister_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அரையாண்டு தேர்வு வினாதாள்கள் வெளியாகியுள்ளதற்கு தேர்வுத்துறை சார்பில் வினாதாள்கள் குறுந்தகடு வடிவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. எங்கு வெளியாகிறது என்று தெரியவில்லை ஆதலால் வினாத்தாள்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பே வெளியானதால் கூறப்படும் வினாத்தாள் வெளிவராது என்று அமைச்சர் தெரிவித்தார.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஒன்றியத்துக்குட்பட்ட குருமந்தூர் கோசனம் கெட்டிச்செவியூர் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டிடும் வேட்பாளைர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வாகனத்தில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அந்தந்த ஊராட்சிகளில் போட்டிடும் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிக்குழு உறுப்பினர்கள் மாவட்ட உறுப்பினர் என அனைவருக்கும் அவரவர்கள் சின்னங்களில் வாக்களிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு ஊராட்சிகளுக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்துள்ளதாகவும் அது போல் ஊராட்சிகளில் மேன்மேலும் வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற வேண்டுமெனில் அதிமுக சார்பில் போட்டிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் மத்திய அரசிமிருந்து உள்ளாட்சிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரவேண்டியுள்ளது. தேர்தல் முடிந்ததும் அந்தொகை உள்ளாட்சிகளுக்கு வந்து சேரும் அப்போது கிராமங்களுக்கு அனைத்து திட்டங்களும் விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். பிரச்சாத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் நம்பியூர் வட்டத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் சோலார் மூலம் 24 மணிநேரமும் முன்முனை மின்சாரம் விவசாயத்திற்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தற்போது நடைபெற்று வரும் அரையாண்டு தேர்வில் சில வினாத்தாள்கள் தேர்வுக்கு முந்தியே வெளியாகிவருவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தேர்வுத்துறை குழு மூலம் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு குறுந்தகடு வடிவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு அனுப்பப்படுகிறது. மாவட்டத்திலிருந்து அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது எங்கு வெளியாகிறது என்று தெரியவில்லை ஆதலால் வெளியானதாகக்கூறப்படும் வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளியாதாகக்கூறப்படும் வினாதாள்கள் தேர்வுக்கு வாராது என்றும் தெரிவித்தார். இப்பிரச்சாரப்பயணத்தில் நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.