தமிழ்நாட்டில் அரசு சார்பில் செயல்பட்டுவரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்திவருகிறது.
இதில் ஏராளமானோர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களாகவும் உதவியாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும ஆமபுலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
கரோனோ காலத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் அருகே தகுந்த இடைவெளியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் ஏராளமான அதன் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பி.எல். விடுப்புக்காக வழங்கிய தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை அதனை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஒப்பந்த நிறுவனத்தின்மீது அதன் பணியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் எழுப்பினார்கள். அப்போது ஆம்புலன்ஸ் ஒப்பந்த நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
இதையும் படிங்க: பட்டியலின மக்கள் வீடுகள் இடிந்து தரைமட்டம்!