ஈரோடு மாவட்டம் அருகே உள்ள சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.வாரந்தோறும் இவர்களுக்கு கூலி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த முன்று மாதகாலமாக இவர்களுக்கு கூலி வழங்கபடவில்லை.
இதுகுறித்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் முறையிட்டனர். இதற்கு மத்திய அரசிடமிருந்து நிதி வந்தவுடன் கூலி வழங்க ஏற்பாடு செய்வதாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 600 பெண்கள் உட்பட 1000 பேர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சத்தியமங்கலம் கோவை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மூன்று மாத ஊதியத்தை வட்டியுடன் வழங்கக்கோரியும் இல்லையெனில் ஊதியம் வழங்கும் வரை பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, காவல் துறை அனுமதியின்றி தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் 600 பெண்கள் உட்பட 1000 பேரை சத்தியமங்கலம் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க:
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!