திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்த உசைனுக்கு (37), தஸ்லீமா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். உசேனின் மனைவி தஸ்லீமா கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக நெய்க்காரபட்டி காவல் நிலையத்தில் உசேன் புகார் அளித்துள்ளார்.
காவலர்கள் புகாரை அலட்சியம் செய்ததால் மனமுடைந்த உசேன், பழனி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் உடனடியாக உசேனை மடக்கிப் பிடித்து தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் பழனி நகர காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த பழனி டிஎஸ்பி சிவா, உசேனை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினார். காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளை முயற்சி