திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் செட்டியார் பூங்கா அருகே குடியிருக்கும் கார்த்திக் (30) என்பவர் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது காட்டெருமை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கும்வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நகரத்துக்குள் வந்த காட்டெருமை: பொதுமக்கள் அதிர்ச்சி!